இவர்கிட்ட ‘ஆசீர்வாதம்’ வாங்குனா பிரச்சனை தீர்ந்திரும்.. பரபரப்பை கிளப்பிய திடீர் ‘சாமியார்’.. ஒரு வாரத்துக்கு முன்னாடி அவர் இருந்த நிலைமையே வேற..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் சாலையோரம் ஆதரவின்றி இருந்த முதியவரை மக்கள் திடீரென சாமியார் என வழிபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கிட்ட ‘ஆசீர்வாதம்’ வாங்குனா பிரச்சனை தீர்ந்திரும்.. பரபரப்பை கிளப்பிய திடீர் ‘சாமியார்’.. ஒரு வாரத்துக்கு முன்னாடி அவர் இருந்த நிலைமையே வேற..!

மதுரை எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ். இவர் அப்பகுதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஹெலன்மேரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் திடீரென, தான் வேலை பார்த்த நிறுவனத்துக்கு அருகே சாலையோரம் யாரிடமும் பேசமால் ஆண்ட்ரூஸ் அமர்ந்துள்ளார். குடும்பத்தினர் வந்து பலமுறை அழைத்தும் செல்லாமல், மௌனமாக அங்கேயே இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.

A beggar who became a saint in Madurai goes viral

அன்றிலிருந்து அக்கம்பக்கத்தினர் கொடுக்கும் பிஸ்கட், தேநீர் போன்ற உணவு பொருட்களை சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இவரிடம் ஆசீர்வாதம் வாங்கியதால் பிரச்சனை தீர்ந்ததாக தகவல் தீயாக பரவியுள்ளது. உடனே அவரை சாமியாராக்கி குடிசை ஒன்றையும் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

A beggar who became a saint in Madurai goes viral

ஒரு வாரத்துக்கு முன்பு வரை சாப்பிட்டியா என்று கூட கேட்க ஆள் இல்லாத நிலையில் இருந்த ஆண்ட்ரூஸை, தற்போது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆசீர்வாதம் வாங்குவதும், உணவு பொருட்களை கொடுப்பதுமாக உள்ளனர். தினமும் மக்கள் ஆண்ட்ரூஸை சாமியாரை மண்டியிட்டு வணங்கி நெற்றியில் திருநீறு பெற்றுச் செல்கின்றனர்.

A beggar who became a saint in Madurai goes viral

புதிதாக கம்பெனி ஆரம்பித்தால் சாமியார் ஆண்ட்ரூஸ் முன்பு வைத்து வணங்கி செல்வதாகவும் கூறப்படுகிறது. தினமும் பிஸ்கட், தேநீர், ரொட்டி, குளிர்பானம் என மூன்று வேளையும் உணவு கொடுத்து வருகின்றனர். இவற்றை ஆண்ட்ரூஸ் சாமியார் சாப்பிடுகிறாரோ இல்லையோ அவரது குடிசையில் இருக்கும் நூற்றுக்கணக்கான எலிகள் சாப்பிட்டு வருகின்றன. தற்போது இந்த சாமியார் மதுரையில் பேமஸ்ஸாகி வருவதால் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

மற்ற செய்திகள்