'தீக்குளித்த 15 வயது சிறுமி மரணம்...' 'குளிக்கிறதை வீடியோ எடுத்திருக்காங்க...' 'அவங்களுக்கு உடனே தண்டனை கொடுங்க...' கலெக்டரிடம் மனு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குளிப்பதை வீடியோ எடுத்ததற்காக தீக்குளித்த 15 வயது சிறுமி எதிர்பாரத விதமாக சிகிச்சை பலனின்றி இறந்த செய்தி அனைவரையும் கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 14-ம் தேதி வேலூர் மாவட்டம் பாகாயத்தை அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது தன் வீட்டில் இருந்த மண்ணெண்ணை மூலம் தீக்குளித்தார். 90 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பல திடுக்கிடும் சம்பவங்களை வீடியோ வாக்குமுலமாக போலீசாரிடம் தெரிவித்தார்.
அதில், தன் சித்தப்பாவை பழிவாங்குவதற்காக அதே கிராமத்தை சேர்ந்த பூனைக்கண்ணன் என்கிற ஆகாஷ், பாலாஜி, கணபதி என்கிற தாமஸ் என்பவர்கள், தான் குளிக்கும் போது வீடியோ எடுத்ததாக தெரிவித்தார். மேலும் அதனை வாட்ஸப்பில் அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாகவும், தனியே வேலூர் கோட்டைக்கு அழைத்தனர் எனவும் கூறினார்.
கிராமத்தின் பக்கத்தில் இருக்கும் ஏரிக்கரை மலைக்கு சென்ற சிறுமி, அந்த இளைஞர்களை தாக்கியுள்ளார். அதில் ஒருவனின் போனை வாங்கி பார்த்ததில் அதில் தன் பாட்டி குளிக்கும் வீடியோவும், பிற பெண்கள் குளிக்கும் வீடியோவும் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் அதை எல்லாம் அவர் டெலீட் செய்யும் போது அச்சிறுமியை ஒருவன் கல்லால் தாக்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்டதாக தன் வாக்குமூல வீடியோவில் தெரிவித்துள்ளார் அந்த சிறுமி.
இந்நிலையில் சிறுமியின் வாக்குமூலப்படி பூனைக்கண்ணன் என்கிற ஆகாஷ், பாலாஜி, கணபதி என்கிற தாமஸ் ஆகியோரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
90 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி நேற்று (16-ம் தேதி) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின் சிறுமியின் உடல் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
இந்த சம்பவம் அனைவரிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் இந்த மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரின் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
ஆபாச வீடியோ எடுத்த மூன்று இளைஞர்களுடன் மேலும் சில இளைஞர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்றும், சிறுமியை இந்நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வாங்கி தரவேண்டும் என்றும், அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை பெண் குழந்தைகளிடமும் பெண்களிடமும் தவறாக நடந்து கொள்ள நினைப்பவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும் என ஓர் அமைப்பினர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்