'அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி'... வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய நல்ல மழை இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி'... வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரு தினங்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வடதமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகத் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்