விபத்தில் பறிபோன கை.. "ஆனாலும் கொஞ்சம் கூட ஒடஞ்சு போகலேயே.." 80 வயதிலும் மிரள வைக்கும் முதியவர்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உடலளவில் ஒருவர் அதிகம் பாதிக்கப்படும் போது, நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். அவற்றை எல்லாம் கடந்து, தனது வாழ்வில் வெற்றி கண்ட ஒருவரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

விபத்தில் பறிபோன கை.. "ஆனாலும் கொஞ்சம் கூட ஒடஞ்சு போகலேயே.." 80 வயதிலும் மிரள வைக்கும் முதியவர்..

Also Read | "1 KG டீ தூள் விலை இவ்ளோ ரூபாவா..?" .. அப்படி என்னங்க இதுல ஸ்பெஷல்??

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமன். சுமார் 80 வயதான இவர், தனது ஆரம்ப காலகட்டத்தில்,  தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் ஸ்ரீராமன் சிக்கவே, அவரது வலது கை துண்டாக சென்றுள்ளது. இதனிடையே,  விபத்தில் சிக்கிய ஸ்ரீராமனுக்கு மருத்துவமனையில் சரிவர சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்டுகிறது.

மனம் தளராத ஸ்ரீராமன்

இதன் காரணமாக, தனது வலது கையை இழந்த ஸ்ரீராமன், அதன் பின்னர் சுமார் 37 ஆண்டுகளாக அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். ஒரு கையை இழந்த பிறகும், மீதமுள்ள இடது கையுடன் சற்று நம்பிக்கையும் சேர்த்த படி, சைக்கிளில் போஸ்ட் மாஸ்டராக வலம் வந்து, பணி ஓய்வு பெற்றார் ஸ்ரீராமன்.

80 yr old man working as courier delivery guy with one hand

வயசு ஆனாலும் நம்பிக்கை குறையல..

பணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டாலும், வயதாகி விட்டது என நினைக்காமல், தனது 80 வயதிலும் கொரியர் நிறுவனத்தில் பார்சல்களை டெலிவரி செய்து வருகிறார். சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவில், பல வீடுகளுக்கு பார்சல் டெலிவரி செய்து வரும் ஸ்ரீராமன், தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், காலையில் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு,கொரியர்  வேலைகளையும் பார்த்து வருகிறார்.

பலருக்கு முன்னுதாரணம்..

இதுகுறித்து பேசும் ஸ்ரீராமன், "நான் போக்குவரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது, வீட்டு மாடு முட்டி எனது கையை இழந்தேன். இதன் பின்னர் செய்தித்தாள் உள்ளிட்டவற்றை போட்டு வந்தேன். தொடர்ந்து, எனது தந்தை மூலமாக போஸ்ட் ஆபீஸில் எனக்கு வேலை கிடைத்தது. 37 ஆண்டுகள் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். தற்போது, இரண்டு கொரியர் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறேன். மொத்தமாக சுமார் 7500 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். என் மனதில் தைரியமும், நம்பிக்கையும் இருப்பதால் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

80 yr old man working as courier delivery guy with one hand

விபத்திற்கு பிறகு தான் நான் திருமணம் செய்து கொண்டேன். எனது மகளை படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்தோம். இப்போது இரண்டு பேத்திகளும் இருக்கிறார்கள" என ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார்.

விபத்தில் கையை இழந்த பிறகும், கொஞ்சம் கூட மனம் தளராமல் 80 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைத்து வரும் ஸ்ரீராமன், ஏராளமானோருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

Also Read | "என்ன மன்னிச்சுடுங்க.." திருடிய பணத்தை மீண்டும் கோவில் உண்டியலில் போட்ட திருடன்.. 'பின்னணி' என்ன??

OLD MAN, COURIER DELIVERY

மற்ற செய்திகள்