'சூப் என்ற பெயரில் இருந்த பார்சல்'... 'சந்தேகப்பட்டு பிரித்த அதிகாரிகள்'... சென்னை விமானநிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு பார்சல்கள் வந்திருந்தது. அதனை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நெதர்லாந்து நாட்டிலிருந்து 2 பார்சல்கள் வந்திருந்தன. அப்போது, நாமக்கல், சென்னை முகவரிகளுக்கு வந்த 2 பார்சல்களில் பரிசு பெட்டி, சூப் என இருந்தது. இது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

'சூப் என்ற பெயரில் இருந்த பார்சல்'... 'சந்தேகப்பட்டு பிரித்த அதிகாரிகள்'... சென்னை விமானநிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

இதையடுத்து சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், நாமக்கல் முகவரிக்கு வந்த பார்சலுக்குள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நில நிற போதை மாத்திரைகள் இருந்தன. சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 26 கிராம் போதை பவுடர் இருந்தது.

மேலும் அதிகாரிகள் விசாரித்த போது, பார்சல்களில் இருந்த முகவரிகள் போலியானவை எனத் தெரியவந்தது. இதையடுத்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகச் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 lakh drugs in soup mix packets Parcel seized at Chennai airport

5 மாதங்களுக்குப் பின் மீண்டும் தபால் பார்சல்களில் போதை மாத்திரைகள் கடத்தப்பட்டிருப்பது சுங்க இலாகா அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்