Veetla Vishesham Mob Others Page USA

"600 டவரை திருடிட்டு போய்ட்டாங்க".. போலீசுக்கு வந்த புகார்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 600 டவர்களை காணவில்லை என தனியார் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனம் ஒன்று புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

"600 டவரை திருடிட்டு போய்ட்டாங்க".. போலீசுக்கு வந்த புகார்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!

Also Read | "உலகின் மிகப்பெரிய நன்னீர் திருக்கை மீன்".. வலை வீசிய கிராமத்தினருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்..எடையை பார்த்து மிரண்டுபோன மக்கள்..!

மும்பையை தலைமையிடமாக செயல்பட்டுவரும் தனியார் செல்போன் நெட்வொர்க் டவர் அமைக்கும் நிறுவனம் ஒன்று இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் 26,000 செல்போன் டவர்களையும் தமிழகத்தில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களையும் இந்நிறுவனம் அமைத்து பராமரித்து வருவதாக தெரிகிறது. இதனிடையே பயன்பாட்டில் இல்லாத டவர்கள் தமிழகத்தில் காணாமல் போயிருப்பதாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறது இந்த நிறுவனம்.

டவரை காணவில்லை

இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு தனியார் நெட்வொர்க் நிறுவனம் தங்களது சேவையை நிறுத்தியது. இதன் காரணமாக அந்த நிறுவனத்திற்காக அமைக்கப்பட்ட டவர்கள் பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கின்றன. இடையே கொரோனா பெருந்தொற்று காலத்தில் டவர்களை பராமரிக்கும் சேவையை நிறுவனங்களினால் தொடர முடியாமல் போயிருக்கிறது. இந்த காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட டவர்கள் காணாமல் போயிருக்கின்றன.

சமீபத்தில், வேறு நிறுவனத்திற்காக டவர்களை இயக்க முடிவெடுத்து அதற்காக ஆய்வுக்கு சென்றபோதுதான் டவர்கள் மாயமானது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து இது குறித்து காவல்துறையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் புகார் அளித்திருக்கிறது.

இதனை அடுத்து செயல்படாத செல்போன் டவர்களில் நிலைமை குறித்து தமிழகம் முழுவதும் அடுத்தடுத்த ஆய்வு மேற்கொண்டதில் 600க்கும் மேற்பட்ட டவர்கள் மாயமாகி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தை சாதகமாக பயன்படுத்தி மர்ம கும்பல் ஆளில்லாமல் கண்காணிப்பு இல்லாமல் இருக்கும் தங்களது செல்போன் டவர்களை திருடி செல்வதாக பாதிக்கப்பட்ட நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

600 Towers missed network company lodged a complaint

நஷ்டம்

ஒரு டவர் அமைக்க 25 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் காணாமல்போன டவர்கள் மூலமாக தங்களுக்கு 100 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறது. மேலும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் டவர்களை பாதுகாக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறது அந்த நிறுவனம்.

தமிழகத்தில் இதேபோன்று வேறு டவர் அமைக்கும் நிறுவனங்களுக்கு சொந்தமான டவர்களும் காணாமல் போயிருப்பதாகவும், சில திருட்டு கும்பலை தாங்களே பிடித்து காவல்துறையில் ஒப்படைத்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் 600 க்கும் மேற்பட்ட டவர்கள் காணாமல் போயிருப்பதாக டவர் அமைக்கும் நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | சவூதியில் மரணமடைந்த தமிழர்.. கவலையில் இருந்த குடும்பத்துக்கு 30 நாளுக்கு அப்பறம் வந்த அடுத்த ஷாக் நியூஸ்..!

TOWERS, TOWERS MISSED, NETWORK COMPANY, MOBILE TOWERS MISSING, CELLPHONE TOWERS MISSING

மற்ற செய்திகள்