'40 அடி ஆழம்'...48 மணி நேரம்...'60 வயது' பாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிணற்றுக்குள் விழுந்த பாட்டி இரண்டு நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'40 அடி ஆழம்'...48 மணி நேரம்...'60 வயது' பாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த கூடமலை பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். 60 வயதை கடந்த வள்ளியம்மாளின் கணவர் இறந்து விட்ட நிலையில் அவர் தனிமையில் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில் அவர் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவருடைய உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பல இடங்களிலும் தேடிய நிலையில் அவர் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை.

இந்நிலையில் கூடமலை கிராமத்தில் உள்ள வறண்ட கிணற்றில் வயதான மூதாட்டி ஒருவர் தவித்து வருவதாக ஆடு மேய்க்க சென்றவர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் கிணற்றுக்குள் தவித்து வந்த வள்ளியம்மாளை பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் ''அவ்வப்போது மனநிலை பாதிக்கப்படும் வள்ளியம்மாள் கடந்த ஞாயிற்று கிழமையன்று கிணற்றி தவறி விழுந்துள்ளார். 40 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில் 2 நாட்களாக தவிது வந்த மூதாட்டி தற்போது நலமுடன் மீட்கப்பட்டுள்ளார்'' என காவல்துறையினர் கூறினர். வறண்ட கிணற்றில் இரண்டு நாட்களாக தவித்து வந்த மூதாட்டி மீட்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ACCIDENT, SALEM, WELL, OLD LADY