'நலங்கு வச்சு களைகட்ட தொடங்கிய திருமண விழா'... 'ஜோராக வந்த சீர்வரிசை'... ஒரு செகண்டில் துக்க வீடாக மாறிய கல்யாண வீடு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நலங்கு வைத்து மகிழ்ச்சியாகத் தொடங்க இருந்த திருமண வீடு இறுதியில் துக்க வீடாக மாறிய நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ள முள்ளுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயம் செய்து வரும் இவருக்கு இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து நலங்கு வைத்து சீர்வரிசை செய்யும் விழா விமர்சையாக நடந்தது. இதற்காக சொந்தக்கார்கள் பல திருமண வீட்டில் கூடி இருந்தார்கள். நலங்கு வைப்பதற்காகச் சொந்தக்காரர்கள் பலர் சீர்வரிசை கொண்டு வருவது வழக்கம். இதற்காக அவர்களை வரவேற்கும் விதமாக கயிற்றில் வெடிகளை வரிசையாக கட்டி வெடித்து கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடி ஒன்று வெடித்தது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த குத்தாலம் மாதிரிமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் சக்தி (6) மற்றும் முள்ளுக்குடி பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் பிரவீன் (6) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சந்தோச கோலத்திலிருந்த திருமண வீடு ஒரு நொடியில் அதிர்ந்து போனது. காயமடைந்த சிறுவர்கள் இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இதில் சிறுவன் சக்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுவன் பிரவீனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வெடி விற்பனை செய்த திருவாலங்காடு சின்னதுரை மற்றும் பாண்டியனை கைது செய்த பந்தநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீர்வரிசை விழாவில் நடந்த வெடி விபத்து அந்த கிராமத்தையே அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
மற்ற செய்திகள்