‘மாஸ்க் போடாமல் வெளியே வந்தால் 6 மாதம் சிறை’.. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி உத்தரவை பிறத்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி போன்ற சுற்றுலா பயணிகளை கவரக் கூடிய பல இடங்கள் உள்ளன. இங்கு வரும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணியாமல் வலம் வருவதாக கூறப்படுகிறது. இதனால், வெளிமாநில சுற்றுலா பயணிகள் தங்கள் தமிழக அரசிடம் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் உள்ளூர் வாசிகள் பலரும் முகக்கவசம் அணியவில்லை என தொடர்ந்து புகார் எழுந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். மேலும் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்