கொரோனா 'இறப்பு' விகிதத்தில்... 'சென்னை'யை பின்னுக்கு தள்ளிய 6 மாவட்டங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாவட்டமாக சென்னை திகழ்கிறது. எனினும் சமீபகாலமாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

கொரோனா 'இறப்பு' விகிதத்தில்... 'சென்னை'யை பின்னுக்கு தள்ளிய 6 மாவட்டங்கள்!

இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 2000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1200-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்த நிலையில் இறப்பு விகிதத்தில் சென்னையை 6 மாவட்டங்கள் பின்னுக்குத்தள்ளிய விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

அதன்படி கரூர் மாவட்டம் 2.48% முதலிடத்தை பிடித்துள்ளது. ராமநாதபுரத்தில் 2.01%, செங்கல்பட்டில் 1.99%, கிருஷ்ணகிரியில் 1.9% உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. இதேபோல திருவள்ளூரில் 1.86% மற்றும் மதுரையில் 1.84% உள்ளது. சென்னை 1.63% 7-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்