102 மொய் கவுண்டர்கள்.. திரண்டு வந்த 50,000 பேர்.. மதுரை மண்ணில் நடந்த பிரம்மாண்ட சமுதாய திருமணம்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் 51 ஜோடிகளுக்கு இன்று சமுதாய திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை அம்மா பேரவை செயலாளர் ஆர்பி உதயகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.

102 மொய் கவுண்டர்கள்.. திரண்டு வந்த 50,000 பேர்.. மதுரை மண்ணில் நடந்த பிரம்மாண்ட சமுதாய திருமணம்.. வீடியோ..!

                          Images are subject to © copyright to their respective owners.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும் அதிமுகவின் 51வது பொன்விழா ஆண்டை முன்னிட்டும், மதுரை திருமங்கலத்தில் 51 ஜோடிகளுக்கு சமுதாய திருமணம் நடத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரின் மகளுடைய திருமணமும் நடைபெற்றிருக்கிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தம்பதிகளுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

Images are subject to © copyright to their respective owners.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு., செல்லூர் ராஜு., அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா., மாவட்ட செயலாளர்கள்., அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவில் கலந்துகொள்ள 50,000 வந்திருந்த நிலையில் அவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

Images are subject to © copyright to their respective owners.

சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் திருமணம் நடைபெறும் இடம், உணவு பரிமாறும் இடம் ஆகியவை பொதுமக்களின் வருகைக்கு தகுந்தபடி வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், மொய் எழுத மட்டுமே 102 கவுண்டர்கள் வைக்கப்பட்டு அதற்கென பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதுமட்டும் அல்லாமல், திருமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள பீரோ, கட்டில் மற்றும் மெத்தை  உள்ளிட்ட சீர்வரிசைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners.

திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு காலை 7 மணி முதலே விருந்து துவங்கி இருக்கிறது. இதற்கென பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்திருக்கின்றன. முன்னதாக, சாலை மார்க்கமாக இந்த சமுதாய திருமணம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்  மற்றும் ஜெயலலிதா ஆகியோரது வெண்கல சிலைக்கு மாலை அணிவித்திருந்தார். அதன் பின்னர் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

50,000 பேர் திரண்ட இந்த சமுதாய திருமணம் குறித்து மதுரை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

 

MARRIAGE, MADURAI

மற்ற செய்திகள்