'ஒரே நாளில் இத்தனை பேரையா'?...'துரத்தி துரத்தி கடித்த நாய்'...கிராம மக்கள் கொடுத்த தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலத்தில் வெறிநாய் ஒன்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதில் 50கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

'ஒரே நாளில் இத்தனை பேரையா'?...'துரத்தி துரத்தி கடித்த நாய்'...கிராம மக்கள் கொடுத்த தண்டனை!

சேலம் கிச்சிப்பாளையம் அருகே களரம்பட்டி கடைவீதியில் நேற்று காலை 7.45 மணியளவில் அந்த பகுதி பொதுமக்கள் சிலர் டீக்குடிப்பதற்காக வந்தனர்.சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அந்த பகுதிக்கு திடிரென வந்த கருப்பு நிற வெறிநாய்,கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்து குதறியது. இதில் பலருக்கும் கை,கால் என பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.காயம் அடைந்தவர்கள் வலியால் துடித்து கொண்டிருந்தார்கள்.

பின்னர் அங்கிருந்து ஓடி அருகில் உள்ள நாராயணன் நகர் பகுதிக்கு சென்றது. அப்போது அங்கிருந்த சிலரையும் கடித்தது. இதில் அவர்களுக்கும் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.அதோடு நிற்காமல் காந்திமகான் தெருவுக்கு ஓடிச்சென்று சிலரை கடித்தது.தொடர்ந்து பச்சப்பட்டி பகுதிக்கு ஓடிச்சென்று அங்கிருந்த சிலரை கடித்து குதறி விட்டு ஓடியது.இதனை சற்றும் எதிர்பாராத மக்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து நின்றனர்.

இந்நிலையில் நாயின் அட்டகாசம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அதன்பேரில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள் நாயினை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் வெறிநாயை பிடிக்க முயன்ற மாநகராட்சி ஊழியர்கள் 2 பேரையும் அது கடித்தது.இதையடுத்து காயம் அடைந்த 50கும் மேற்பட்டோர்  சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

ஆனால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு போதிய மருந்து இருப்பு இல்லை என கூறப்படுகிறது.இதனால் மருத்துவமனை ஊழியர்களுக்கும்,காயமடைந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் மருத்துவர்கள் காயமடைந்தவர்களை சமாதானம் செய்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதனிடையே 50 பேரை கடித்து விட்டு ஓடிய வெறிநாய் பட்டைக்கோவில் பகுதியில் நிற்பதை பார்த்த கிராம மக்கள் சிலர்,அந்த நாயை துரத்தி சென்று அடித்து கொன்றனர்.சேலம் மாநகராட்சி பகுதி முழுவதும் நாய் தொல்லை அதிகமாக இருப்பதால்,மாநகராட்சி உடனடியாக தலையிட்டு அதற்கு தகுந்த தீர்வை காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SALEM, DOG BITES