'சாருக்கு' 5 வயசு தான் ஆகுது... ஊரடங்கை வீணாக்காமல்... அப்பாவோட சேர்ந்து 'பிசினஸ்' செய்யும் குட்டிப்பையன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கில் பொழுதை வீணாக்காமல் அப்பாவுக்கு பிசினஸில் உதவி செய்து வருகிறார்.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. விடுமுறையில் பள்ளி மாணவர்கள் விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். அதே நேரம் பெற்றவர்களுக்கு உதவி செய்யும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அமைந்துள்ளது பண்ணியமலை. அந்த கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக தேனீக்களை வளர்த்து அதன் மூலம் தேனை எடுத்து விற்பனை செய்து வருகிறார்.
அவரின் 2-வது மகன் ரீதர்சன் 1-வது படித்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து தேனீ வளர்க்கும் தொழிலை கற்றுக்கொண்டு உதவி செய்து வருகிறார். தேனடையை கையில் எடுத்து அந்த தேனீக்களை லாவகமாக பிடித்து வெளியேற்றி தேனை இலகுவாக எடுக்கிறான் இந்த சிறுவன். இதுகுறித்து ரீதர்சன், ''தேனீக்களை கையிலேயே பிடிப்பேன். எனக்கு எந்தவித பயமும் இல்லை, தேனீ என்னை கொட்டாது. பயப்படாமல் தேனை எடுப்பேன். ஒரு சாக்கு மூட்டை முழுவதும் பாட்டிலில் தேனை சேகரித்து வைத்துள்ளோம்,'' என தெரிவித்தார்.
சிறுவனின் தந்தை குணசேகரன், அடுக்குத் தேனீ, கொசுத் தேனீ ஆகிய இரு வகையான தேனீக்களை தாம் வளர்த்து வருவதாகவும் இத்தொழிலின் மூலம் ஆண்டிற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்