வீட்டு வாசல்ல உட்காந்திருந்த கணவன்.. திடீர்னு கேட்ட அலறல் சத்தம்.. 200 ரூபாய்க்காக நடந்த பயங்கரம்.. பரபரப்பில் தூத்துக்குடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி அருகே 200 ரூபாய் பணத்துக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சோகம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மஞ்சநம்பிகிணறு கிராமத்தினை சேர்ந்தவர் அழகுதுரை. 28 வயதாகும் இவர் பூ மொத்த வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் அழகுதுரை வீட்டின் முன் உட்கார்ந்திருக்கிறார். அப்போது அங்குவந்த மர்ம கும்பல் ஒன்று அழகுதுரையை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றிருக்கிறது. இதனால் பதறியடித்து அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஆனால், அழகுதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி காவல்துறை டி.எஸ்.பி.வெங்கடேஷ், கயத்தாறு காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும், அழகுதுரையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் காவல்துறையினர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க விசாரணையை துவங்கியது போலீஸ்.
விசாரணை
காவல்துறை நடத்திய விசாரணையில் அழகுதுரை நேற்று செட்டிக்குறிச்சியில் உள்ள மதுபான கடைக்கு நண்பர் ஒருவருக்கு மது வாங்க சென்றிருக்கிறார். அப்போது அழகுதுரையின் ஊரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் அங்கு மது அருந்திக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, கனகராஜ், அழகுதுரையிடம் மது வாங்க பணம் போதவில்லை என்றும் 200 ரூபாய் கேட்டதாகவும் தெரிகிறது. அப்போது அழகுதுரை தன்னிடத்தில் பணம் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து கனகராஜ் பணம் கொடுக்குமாறு அழகுதுரையை வற்புறுத்தவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
கைது
இதனையடுத்து, கனகராஜ்-க்கு ஆதரவாக ஸ்டாலின் என்பவர் அழகுதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள், இருதரப்பினரையும் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இதனால் கோபத்தில் இருந்த கனகராஜ் தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு அழகுதுரையின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியிருக்கிறது. ஒருகட்டத்தில் அழகுதுரையை தாக்கிவிட்டு கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில், காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஸ்டாலின் , மாடசாமி, அவரது மகன் பட்டுராஜ், கனகராஜ், பால்பாண்டி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், நாகராஜ், பாலமுருகனை தீவிரமாக தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
மற்ற செய்திகள்