கம்பம் அரசு மருத்துவமனையில் ‘4 நாளில் 40 பிரசவங்கள்’ பார்க்கப்பட்டது.. மருத்துவ அலுவலர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு அமலில் உள்ள இந்த சமயத்தில், இதுவரை வரை இல்லாத அளவுக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் 4 நாள்களில் 40 பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

கம்பம் அரசு மருத்துவமனையில் ‘4 நாளில் 40 பிரசவங்கள்’ பார்க்கப்பட்டது.. மருத்துவ அலுவலர் தகவல்..!

தேனி மாவடத்தில் அதிக பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனைகளில் கம்பம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இம்மாவட்டத்தில் பெரியகுளம், போடி, தேனி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிக பிரசவங்கள் நடைபெறும். இதையடுத்து கம்பம் அரசு மருத்துவமனையில் அதிக பிரசவங்கள் நடைபெறுகிறது.

கம்பம் அரசு மருத்துவமனையில், அப்பகுதியை சுற்றியுள்ள உத்தமபாளையம் தாலுகா, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பிரசவத்துக்காக இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். மாதந்தோறும் சராசரியாக 200 பிரசவங்கள் நடைபெறுகிறது. கடந்த மாதம் 215 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த மாதம் 4 நாட்களில் 40 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக மே 1ம் தேதி 13 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.

இதுகுறித்து மருத்து அலுவலர் பொன்னரசன் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கால் கேரளாவில் இருந்து கர்ப்பிணிகள் வராமல் உள்ளனர். அப்படி இருந்தும் அதிக எண்ணிக்கையில் பிரசவங்கள் நடைபெறுகிறது. இந்த மாதம் இதே நிலை நீடித்தால் அதிகபட்சமாக 300 பிரசவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவாக 4 நாட்களில் 40 பிரசவங்கள் பார்த்து சாதனை புரிந்த டாக்டர்களுக்கு மருத்துவ அலுவலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.