ராஜேந்திர பாலாஜியை பிடிக்க '4 தனிப்படைகள்' தீவிரம்...! - நீதிபதி உத்தரவை தொடர்ந்து 'அதிரடி' முடிவு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராஜேந்திர பாலாஜி உட்பட நான்கு பேருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர்களது மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க '4 தனிப்படைகள்' தீவிரம்...! - நீதிபதி உத்தரவை தொடர்ந்து 'அதிரடி' முடிவு...!

சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார் முன்ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பளித்தார். அதில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு டி.எஸ்.பி மற்றும் இரண்டு காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 4 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

RAJENDRA BALAJI, EX MINISTER, ARREST, ராஜேந்திர பாலாஜி, கைது, நான்கு தனிப்படைகள்

மற்ற செய்திகள்