7 மாதங்களுக்கு பின் 'துப்புதுலங்கிய' வழக்கு... திருடுன 'நகைய' லவ்வர்ஸ்ட்ட... குடுத்து 'ஜாலியா' இருந்துருக்காங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி அருணாதேவி. இவர்களுக்கு கீழ் தளத்தில் மளிகைக்கடையும், முதல் மாடியில் வீடும் உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மளிகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, அருணாதேவி போலீசாரிடம் புகாரளித்திருந்தார். புகாரில், 40 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாயும் கொள்ளைப் போனதாக அருணாதேவி குறிப்பிட்டிருந்தார். சிசிடிவி மற்றும் கைரேகை மூலமாக திருடர்களை தேடி வந்த போலீசாருக்கு துப்பு எதுவும் கிடைக்காமல் இருந்து வந்தது.
இதனையடுத்து சுமார் 7 மாதங்களுக்கு பிறகு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து ரகசிய தகவல் உதவி கமிஷனர் அரிகுமாருக்கு கிடைத்துள்ளது. உடனடியாக தனிப்படை போலீசார், திருடர்கள் குறித்த விவரங்களை வடபழனி, கோடம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு சென்று சேகரித்தனர். தொடர்ந்து பிரபா (21), ஆனந்த குமார் (20), சாய் கிருஷ்ணன் (21) ஆகியோரை கைது செய்தனர். இந்த மூன்று பேர்களிடம் இருந்து சுமார் 17 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், சாய்கிருஷ்ணன் மற்றும் பிரபா புழல் சிறையில் இருந்த போது, இட்டா அஜித் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து மூன்று பேரும் வெளியில் வந்தவுடன் மூன்று பேரும் சேர்ந்து ஒரே திருட்டு மூலம் செட்டிலாகி விடலாம் என திட்டம் தீட்டியுள்ளனர். இதன்படி, வியாசர்பாடி பகுதிகளில் சில கடைகளை நோட்டமிடவும் திட்டம் செய்துள்ளனர். ஆனால் சாய்கிருஷ்ணன் மற்றும் பிரபா ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் பீட்டா அஜித்திற்கு கிடைக்கவில்லை.
வெளியே வந்த சாய்கிருஷ்ணன் மற்றும் பிரபா ஆகியோர் தங்கள்து கூட்டாளியான ஆனந்தகுமாரை இணைத்துக் கொண்டு வியாசர்பாடியிலுள்ள சில கடைகளை நோட்டமிட்டு செல்வத்தின் கடையை தேர்வு செய்தனர். சம்பவத்தன்று செல்வம் இரவு 11 மணிக்கு கடையை பூட்டிக் கொண்டு சென்றுள்ளார். அதை நோட்டமிட்ட மூன்று பேரும், கடையின் ஷட்டர் பூட்டை கடப்பாரை கம்பியால் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்த பீரோவை உடைத்து நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
கொள்ளையிட்ட நகைகள் மற்றும் பணங்களை மூன்று பேரும் பங்கிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து திருடிய நகைகளை தங்களின் காதலிகளுக்கு கொடுத்து சந்தோசமாக இருந்துள்ளனர். இதன்பின்னர், போலீசாரிடம் மூன்று பேரும் சிக்கிக் கொண்டனர். திருட்டு நடந்த 7 மாதங்களுக்கு பிறகு அது சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்