'தீயாய் கொதிக்கும் வெப்பம்'... 'இருக்கு நல்ல சம்பவம் இருக்கு'... வானிலை ஆய்வு மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'தீயாய் கொதிக்கும் வெப்பம்'... 'இருக்கு நல்ல சம்பவம் இருக்கு'... வானிலை ஆய்வு மையம் தகவல்!

கோடைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. காலை நேரம் முதலே ஒருவித அனல் நிலவுவதால் வீடுகளில் கடுமையான புழுக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, ''தென் கேரளா முதல் தெற்கு கொங்கன் (0.9 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்று மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

3 Tamil Nadu districts will receive heavy rains in Upcoming days

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை தென் தமிழகம் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் பலத்த மழை பெய்யும்.

வரும் 15-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

3 Tamil Nadu districts will receive heavy rains in Upcoming days

சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியசாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகரில் 6 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி இருந்தது. வேடசந்தூரில் 5 செ.மீ. மழையும், குன்னூர், குடவாசல், கயத்தாறு ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது'' என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்