'மச்சி இங்க கடை எல்லாம் மூடிட்டாங்க டா'... 'கவலையை விடு'... 'நண்பனுக்காக மாஸ்டர் பிளான் போட்ட இளைஞர்கள்'... சல்லி சல்லியாக நொறுக்கிய போலீசார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நண்பனுக்கு உதவுவதாக நினைத்து தற்போது சிறை கம்பிகளுக்குப் பின்னால் 3 இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. எனினும், வெளி மாநிலங்களிலிருந்து மது பாட்டில்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை போலீசார் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரயில் மூலமாக மது பாட்டிகள் கடத்தப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் இன்று மைசூர் - தூத்துக்குடி ரெயிலில் வந்த பயணிகளிடம் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த மணிகண்டன், கடலையூரைச் சேர்ந்த பேச்சிமுத்து ஆகிய 3 பேரின் பைகளைச் சோதனை செய்ய போது அதில் 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 37 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரயில்வே போலீசார் அவர்கள் 3 பேரையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களையும் கோவில்பட்டி மது விலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர், அவர்கள் 3 பேரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், ''3 பேரும் பெங்களூரூவில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது ஊருக்குத் திரும்பி வந்துள்ளார்கள்.
அப்போது கோவில்பட்டியில் உள்ள நண்பர்கள் இவர்கள் 3 பேரைத் தொடர்பு கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கவில்லை, மது கிடைப்பதில் சிரமமாக உள்ளது. எனவே மது வாங்கி வரும் படி கூறியுள்ளனர். நண்பர்கள் ஆசையாகக் கேட்டார்களே என்பதற்காகப் பெங்களூரிலிருந்து மது வாங்கி ரயிலில் பதுக்கி வைத்து மது பாட்டில்களைக் கொண்டு வந்துள்ளார்கள்''. அந்த நேரத்தில் தான் போலீசார் சோதனையில் மூவரும் தற்போது சிக்கியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்