'புதிதாக 3 ரயில் சேவைகள்'... ‘தமிழகத்தில் இன்று முதல் துவக்கம்’... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் புதிதாக 3  பயணிகள் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'புதிதாக 3 ரயில் சேவைகள்'... ‘தமிழகத்தில் இன்று முதல் துவக்கம்’... விவரம் உள்ளே!

கரூர் - சேலம், பழனி - கோவை, பொள்ளாச்சி - கோவை இடையே புதிதாக பாசஞ்சர் எனப்படும் பயணிகள் ரயில் சேவை, இன்று முதல் தொடங்கப்படுகிறது. அதன்படி,

1. கரூரிலிருந்து பகல் 11.40-க்கு புறப்படும் ரயில், சேலத்திற்கு பிற்பகல் 1.25 மணியளவில் வந்து சேர்கிறது. பின்பு சேலத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணியளவில் புறப்படும் ரயில், கரூருக்கு, மதியம் 3.25 மணிக்கு சென்றடைகிறது. இதற்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து, வாரத்தின் 6 நாட்களும் செயல்படுகிறது.

2. இதைப்போன்று, கோவையிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில், காலை 7 மணிக்கு பொள்ளாச்சி வந்தடையும். பின்னர் பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்கு கிளம்பும் ரயில், காலை 8.40 மணிக்கு கோவைக்கு சென்றடைகிறது. இந்த ரயிலும் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து வாரத்தின் 6 நாட்கள் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

3. இதேபோல், பழனியில் இருந்து காலை 10.45 புறப்படும் ரயில், மதியம் 2.10 மணிக்கு கோவை சென்றடைகிறது. பின்னர், கோவையிலிருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 4.40 மணிக்கு பழனி சென்று சேர்கிறது. இந்த ரயில் சேவையை மட்டும் வாரத்தின் 7 நாட்களும் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

TRAIN, PASSENGERS, SALEM, KARUR, COIMBATORE, PAZHANI, POLLACHI