"லேப்டாப் என்ன Weight -ஆ இருக்கு".. கஸ்டம்ஸ் ஆபிசருக்கு வந்த டவுட்...திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய 3 பேர் - வைரலாகும் வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஷார்ஜாவிலிருந்து இருந்து லேப்டாப்பிற்குள் மறைத்து தங்கம் கடத்திவந்த 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

"லேப்டாப் என்ன Weight -ஆ இருக்கு".. கஸ்டம்ஸ் ஆபிசருக்கு வந்த டவுட்...திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய 3 பேர் - வைரலாகும் வீடியோ

Also Read | "எல்லோருக்கும் இரண்டு மடங்கு சம்பளத்தை Increase பன்றோம்".. பிரபல நிறுவனம் வெளியிட்ட தகவல்.. திக்குமுக்காடிப்போன ஊழியர்கள்..!

தங்கம் கடத்தல்

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திவரும் நபர்கள் சமீப காலத்தில் அதிகரித்திருக்கின்றனர். ஷூவிற்குள் பதுக்கி வைப்பது, தங்கத்தை பேஸ்ட்டாக மாற்றி தலைக்குள் ஒட்டி கொண்டுவருவது, பெட்டிகளில் ரகசிய இடம் அமைத்து அதற்குள் தங்கத்தை திணித்து கடத்துவது என வித்தியாசமான முறையில் கடத்தல் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டாலும், சுங்கத்துறை அதிகாரிகள் கச்சிதமாக இவர்களை பிடித்தும் விடுகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திவந்த 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

3 men were arrested for smuggling gold from Dubai to Trichy

லேப்டாப்

கடந்த 11 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த 3 பேர் மீது அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்தது அவர்களுடைய உடமைகளை அதிகாரிகள் சோதித்துள்ளனர். அதில் சந்தேகத்திற்கு இடமான பொருள் ஏதுமில்லை என்றாலும், அவர்கள் கொண்டுவந்த லேப்டாப் மீது சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.

இதன் காரணமாக லேப்டாப்பை திறக்க முடிவு செய்தனர். அப்போது அதனுள் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 1.98 கிலோ இருந்ததாகவும் அதன் மதிப்பு 1.28 கோடி ரூபாய் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 men were arrested for smuggling gold from Dubai to Trichy

வைரல் வீடியோ

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து கிளம்பி ஷார்ஜா வழியாக திருச்சி வந்த பயணிகள் மூன்று பேரிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பை அதிகாரி ஒருவர் பிரித்து அதனுள் இருக்கும் தங்கத்தை எடுக்கும் வீடியோவை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

லேப்டாப்பிற்குள் வைத்து 1.28 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்திவந்த மூன்று பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

DUBAI, TRICHY, ARREST, MEN, TRICHY AIRPORT, திருச்சி விமான நிலையம், சுங்கத்துறை அதிகாரிகள்

மற்ற செய்திகள்