சண்டை பார்க்க போன இடத்தில் வச்சு செஞ்ச 'சேவல்'... சட்டத்தை மதிக்காததால் வந்த வினை...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற சேவல் சண்டையின் போது சேவல்களின் கால்களில் கட்டப்பட்ட கத்திகள் குத்தியதில் 3 பேர் படுயாமடைந்தனர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமானோர் தங்கள் சேவலுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
நேற்றும், நேற்று முன்தினமும் சேர்த்து மொத்தம் 20 ஆயிரம் சேவல்கள் போட்டியில் கலந்து கொண்டன. இந்த சண்டையை பார்க்க ஏராளமானோர் ஆவர்த்துடன் அங்கு குவிந்திருந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சண்டையின்போது சேவல்களின் கால்களில் கத்தியைக் கட்டி மோதவிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதையும் மீறி சேவல்களின் கால்களில் கத்தியைக் கட்டி மோத விட்டுள்ளனர். இதில் ஒரு சேவல் தனது எதிர் சேவலை தாக்குவதற்கு பதிலாக தன்னைச் சுற்றி வேடிக்கை பார்த்தவர்களை நோக்கி பாய்ந்து தாக்கியது.
இதில் சேவலின் கால்களில் கட்டப்பட்டிருந்த கத்தி குத்தியதில் சக்திவேல், சுந்தரராஜ், விக்னேஷ், ஆகியோர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்தோர் படுகாயமடைந்தவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதையடுத்து விதிமீறலில் ஈடுபட்ட 10 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.