'பாவம்ன்னு நம்பி லிப்ட் கொடுத்ததுக்கு'... 'பல நாட்களாக இரவு நேரத்தில் லிப்ட் கேட்டு இளைஞர் செய்த பகீர் சம்பவம்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு அவர்களின் இருசக்கர வாகனத்தில் ஏறுவதை இளைஞர் ஒருவர் வழக்கமாக வைத்திருப்பதாகவும், பின்னர் சிறிது தூரம் சென்றதும் போக்குவரத்து குறைவான இடத்தில் வைத்து பைக்கின் உரிமையாளரைத் தாக்கி அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தைத் திருடி செல்லும் சம்பவம் அதிகமாக நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து மாங்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தார். இந்நிலையில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண் என்ற 21 வயது இளைஞரைச் சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்தன.
இரவு நேரங்களில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போலீசார் கெடுபிடி அதிகம் இருக்காது என்பதால் அங்கு அந்த இளைஞர் நின்று கொள்வது வழக்கம். பின்னர் அந்த பகுதியில் வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி அவர்களிடம் அந்த இளைஞர் லிப்ட் கேட்பார். இந்த நேரத்தில் பேருந்து இல்லை, வீட்டிற்குப் போக வேண்டும் எனப் பாவமாக அவர் பேசுவதைப் பார்த்து சிலர் அந்த இளைஞருக்கு லிப்ட் கொடுத்துள்ளார்கள்.
இதையடுத்து சிறிது தூரம் சென்றதும் அவர்களைத் தலையில் தாக்கியும் கத்தியைக் காட்டி மிரட்டியும், அவர்களை இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்று விடுவதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
லிப்ட் கேட்பது போல் நடித்து லிப்ட் கொடுப்பவர்களைத் தாக்கி மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லும் நபர் பிடிபட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்