asuran USA HOME

'சார் கொஞ்சம் திரும்புங்க'.. 'முதுகில் தட்டிய மர்ம நபர்கள்'.. சென்னையில் இயக்குநருக்கு நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை வளசரவாக்கத்தில் நேற்று இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இயக்குநர் ஒருவரிடமிருந்து மர்ம நபர்கள் இரண்டு பேர் செல்போனை தட்டி பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சார் கொஞ்சம் திரும்புங்க'.. 'முதுகில் தட்டிய மர்ம நபர்கள்'.. சென்னையில் இயக்குநருக்கு நேர்ந்த பரிதாபம்!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காமகோடி நகர் அருகே இருக்கும் குகன் தெருவில், நேற்று இரவு இயக்குனர் ஒருவர் செல்போன் பார்த்தபடியே நடந்து சென்றுள்ளார். அங்கு பைக்கில் வந்த 2 இளைஞர்கள் அந்த இயக்குநரின் முதுகை தட்டி உள்ளனர். இயக்குநரும் திரும்பிப்பார்க்க சற்றும் எதிர்பாராத வகையில் இயக்குநரின் மறுபுறம் வந்த இளைஞர்கள் அவருடைய செல்போனை தட்டிப்பறித்துக்கொண்டு அங்கிருந்து பறந்து சென்றுள்ளனர்.

இதுபற்றி வளசரவாக்கம் போலீஸாரிடம் அந்த இயக்குநர் புகார் அளித்ததன் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கினர். அதில் இயக்குநரிடம் செல்போன் பறித்த இளைஞர்கள் இருவரும் சிறுவர்கள் போல தெரிந்துள்ளது. ஆனால் அவர்கள் வடபழனியில் இருப்பதாக அடுத்தடுத்து தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து வடபழனி முருகன் கோவிலில் வைத்து அந்த விடலை சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் பிறகு அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது அவர்கள் இன்னும் இது போன்ற நிறைய குற்றங்களைச் செய்ததாக தெரிகிறது தெரிகிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இயக்குநர், நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் உதவி இயக்குநர் என்றும் அவர் கடவுச்சீட்டு என்ற ஒரு படத்தை இயக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.‌

STEALING, CHENNAI, POLICE, DIRECTOR