“நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு! ஸ்ட்ரிக்ட்டு!”.. “மக்கள்தொகை கணக்கெடுப்பதாகக் கூறி”.. “2 பெண்கள் பார்த்த வேலை!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள நொளம்பூர் என்கிற கிராமத்தில் வசித்து வருபவர் மணிவண்ணன்.
இவரது வீட்டு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்ற 2 பெண்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பதாகவும் கடன் தருவதாகவும் கூறி ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு வந்துள்ளனர். அதன்பின்னர் ஆளரவம் இல்லாத வீடுகளை கண்டறிந்து அந்த வீடுகளை குறிவைத்து அந்த வீடுகளில் இருந்து நகை பணம் போன்றவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
அப்படித்தான் மணிவண்ணனின் வீட்டிலிருந்து நகைகளை திருடி கொண்டு வெளியே வந்த ஒரு பெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு அந்தப் பெண்ணை போலீசார் விசாரிக்கும்போது அந்தப் பெண் பெயர் கல்பனா(36) என்பதும் அவர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அவருடன் சேர்ந்து கொள்ளை அடித்த இன்னொரு பெண் பெருங்களத்தூர் சேர்ந்த லட்சுமி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் கைது செய்யப்பட்ட கல்பனா கூறியதை வைத்து லட்சுமி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அந்த 2 பெண்களும் திண்டிவனம், மயிலம், பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளில் திருடியதை தாங்களே ஒப்புக் கொண்டனர்.
ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் 35 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.