"10-வது ஹால் டிக்கெட் வாங்கிட்டு வந்துடலாம் மாமா!".. 4 பேர் சென்ற பைக்கை தூக்கி அடித்த கார்.. 'நொடியில்' அரங்கேறிய சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிங்கநேரி கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான கண்ணன் என்பவர் விவசாயம் செய்து வந்தார்.
இவரின் சகோதரி மகள் காவ்யா. அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்துவரும் காவ்யா, தனக்கு ஹால் டிக்கெட் வாங்குவதற்காக தனது மாமா கண்ணனிடம் கேட்டிருக்கிறார். அவர் வெளியூர் போவதை அறிந்த அவரது மகன் சபரீசன், தானும் தனது தந்தை கண்ணனுடன் வருவதாக அடம் பிடித்தார்.
அத்துடன் கண்ணனின் அண்ணன் மகள் மனீஷா என்கிற ஒன்பது வயது மாணவியும் உடன் வருவதாகத் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து பைக்கில் ஹால் டிக்கெட் வாங்குவதற்காக பெருமளஞ்சிக்கு சென்ற கண்ணனுடன் அவரது மகன் சபரீசன், அண்ணன் மகள் மனீஷா, அக்கா மகள் காவ்யா உள்ளிட்ட 4 பேரும் சென்றுள்ளனர்.
அவ்வாறு செல்லும்போது ஏர்வாடி அருகே தங்கள் கிராமத்துக்கு செல்வதற்காக 4 வழிச்சாலையைக் கடக்க முயற்சிக்க, அந்த சமயத்தில் நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் நோக்கி போன கார் ஒன்று சட்டென கண்ணன் உள்ளிட்ட 4 பேரும் சென்ற இருசக்கரவாகனத்தின் மீது மோதி, அவர்களை தூக்கி வீசியது. இதில் கண்ணன் மற்றும் அவரது அண்ணன் மகள் மனீஷா இருவரும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி காவ்யா மற்றும் கண்ணனின் மகன் சபரீசன் இருவரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்