இளம்பெண்ணின் 'கள்ளக்காதலால்' பறிபோன 2 மகன்களின் உயிர்... மருத்துவமனையில் 'உயிருக்கு' போராடும் கணவர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குழந்தைகள் இறந்த நிலையில், கணவர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் குமார்(42) ஆட்டோ டிரைவரான இவருக்கு மனைவி உஷாராணி(30) சித்தார்த்தன், கோப்பெருஞ்சோழன் என 2 ஆண் குழந்தைகள். உஷாராணி பேரூராட்சி பகுதியில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும் அங்கு சூப்பர்வைசராக இருந்த கனகராஜ்(49) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் உஷாராணி கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த குமார், நேற்று காலை அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கனகராஜை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கனகராஜ் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் குமார் தன்னுடைய மகன்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷமருந்தி விட்டார். அந்த வழியே சென்றவர்கள் மூவரும் மயங்கி கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மூவரையும் அருகில் இருந்த சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சித்தார்த்தன் இறந்து விட்டான்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோப்பெருஞ்சோழன், குமார் இருவரையும் ஆம்புலன்ஸில் அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸில் செல்லும்போதே கோப்பெருஞ்சோழன் இறந்து விட்டான். தற்போது குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்