“இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம்”.. என பிரச்சாரம் செய்த எம்ஜிஆர்!.. ஆனாலும் மக்கள் செய்தது என்ன தெரியுமா?.. 1977 தமிழக தேர்தலில் நடந்த படு சுவாரஸ்யம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எம்.ஜி.ஆர் அ.தி.மு.க எனும் கட்சியை ஆரம்பித்து, சந்தித்த முதல் பொதுத் தேர்தல் 1977ல் நடந்த தமிழகத்தின் 6வது சட்டமன்றத் தேர்தல்தான்.

“இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம்”.. என பிரச்சாரம் செய்த எம்ஜிஆர்!.. ஆனாலும் மக்கள் செய்தது என்ன தெரியுமா?.. 1977 தமிழக தேர்தலில் நடந்த படு சுவாரஸ்யம்!

அந்தசமயம் தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்த எம்.ஜி.ஆர் ஏற்கெனவே, திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 1974-ல் நடந்த கோவை மேற்குத் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, இரட்டை இலைச் சின்னத்தை, அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ சின்னமாக நிலைநிறுத்தியிருந்தார். இந்நிலையில் 1977 தேர்தலில் இரண்டு விரல்களைக் காட்டி, இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் மட்டும் “இரட்டை இலைக்கு வாக்களிக்காதீர்கள், சிங்கம் சின்னத்துக்கு வாக்களியுங்கள்” என பிரசாரம் செய்தார்.

ஆம், தாராபுரம் தொகுதியில் முதலில் அய்யாசாமி என்பவரை வேட்பாளராக தேர்தெடுத்த எம்ஜிஆர் அவருக்கு கட்சித் தலைமையில் இருந்து, ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி அனுப்பக் கட்டளையிட்டதை அடுத்து அய்யாசாமியும் வேட்புமனு தாக்கலையும் செய்தார். ஆனால்,சில முரண்பாட்டினால், எம்.ஜி.ஆர் அலங்கியம் பாலகிருஷ்ணன் என்பவரை அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவித்துவிட்டார்.

அதே சமயம், அய்யாசாமியும் அதே தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட அய்யாசாமிக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்துவிட,  அலங்கியம் பாலகிருஷ்ணனுக்கு சிங்கம் சின்னம் தான் கிடைத்தது. எனவேதான் எம்.ஜி.ஆர், “இரட்டை இலைக்கு வாக்களிக்காதீர்கள், சிங்கம் சின்னத்துக்கு வாக்களியுங்கள்” என பிரசாரம் செய்ய வேண்டிய சூழல் வந்தது.

சரி, நடந்தது என்ன?

 

நடந்ததோ, எம்.ஜி.ஆரின் பேச்சையும் மீறி மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க, எம்.ஜி.ஆர் ஆதரித்து வாக்கு சேகரித்த வேட்பாளர் அலங்கியம் பாலகிருஷ்ணன் 3வது இடத்துக்குத் தள்ளப்பட, இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் அய்யாசாமி, அதே தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 2,682 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதுதான் வரலாறு.

மற்ற செய்திகள்