‘கோயிலுக்கு’... ‘நண்பரோடு சென்ற சிறுமிக்கு’... ‘வழியில் நடந்த கொடூரம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில், நண்பரோடு சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் மலைமீதிருக்கும் அழகர் கோயிலுக்கு, அடர்ந்த வனப்பகுதியான ஒத்தையடிப்பாதையில், நண்பருடன் 17 வயது சிறுமி ஒருவர் சென்றுள்ளார். குறைவான ஆள்நடமாட்டம் உள்ள இந்தப்பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, புதருக்குள் மறைந்திருந்த நபர் ஒருவர், கையில் வைத்திருந்த கத்தியை காட்டி, இருவருடமிருந்து செல்ஃபோன், அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்ததாகத் தெரிகிறது.
பின்னர், அவர்களுடன் யாரும் வராததை பயன்படுத்தி அந்த வழிப்பறி நபர், இளைஞரை அடித்து விரட்டிவிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த அந்த வழிப்பழி நபரை போலீசார் கைதுசெய்தனர்.
விசாரணையில் அந்த நபர், மேலூரைச் சேர்ந்த தர்ஷன் என்பது தெரியவந்தது. பாலியல் வன்கொடுமை புகாரின்பேரில், அவர்மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.