'கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க'... 'பப்ஜி' மதன் வழக்கில் முக்கிய திருப்பம்'... காவல்துறை அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பப்ஜி மதனைச் சென்னை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தார்கள்.
மதன் மற்றும் 'டாக்சிக்' மதன் - 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக, 'பப்ஜி' உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாகப் பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், பெண்களை ஆபாசமாகச் சித்தரித்துப் பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், ஜூன் 18-ம் தேதி தருமபுரியில் கைது செய்யப்பட்ட 'பப்ஜி' மதன், புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கச் சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பெற்றதாக பப்ஜி மதன் மீது குற்றம்சாட்டப்பட்டது. தற்போது வழக்கின் அடுத்த கட்டமாக பப்ஜி' மதனுக்கு எதிராக 1,600 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்துள்ளது. 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குற்றப்பத்திரிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் புகாரளித்த நிலையில் 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்