‘கடைக்கு சென்ற மகள்’... ‘திரும்பி வீட்டிற்கு வராததால்’... 'அதிர்ச்சியடைந்த தந்தை'... 'இளைஞரால் நடந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி அருகே 16 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கடைக்கு சென்ற மகள்’... ‘திரும்பி வீட்டிற்கு வராததால்’... 'அதிர்ச்சியடைந்த தந்தை'... 'இளைஞரால் நடந்த பயங்கரம்'!

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகரான் புதூர் அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது 16 வயது மகள் நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். கடைக்கு சென்ற மகள் நீண்ட நேரமாக திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த செல்லதுரை, அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் தன் மகளை காணாததால் அச்சமடைந்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் கடத்தப்பட்ட சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தேரூர் அருகே புது கிராமம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (24) என்ற இளைஞர் சிறுமியை கடத்தி சென்றுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் புதுகிராமம் பகுதியில் மகேஷ்குமாரை ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்தனர். மகஷ்குமாரிடம் இருந்து கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஆரல்வாய்மொழி போலீசார் ஒப்படைத்தனர்.

சிறுமியை கடத்தியதாக மகேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். எதற்காக சிறுமியை கடத்தினார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று  வருகிறது. ஏற்கனவே 2018-ம் ஆண்டு ஒரு சிறுமியை கடத்தியதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்த இளைஞர் மகேஷ்குமார், மீண்டும் மற்றொரு சிறுமியை கடத்தியது அங்குள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

STUDENTS, YOUTH, KANYAKUMARI, POCSO