'இந்தியாவில் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு'... 'அந்த லிஸ்டில் இருக்கும் தமிழக மாவட்டங்கள்'... சுகாதாரத்துறை பரிந்துரை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

'இந்தியாவில் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு'... 'அந்த லிஸ்டில் இருக்கும் தமிழக மாவட்டங்கள்'... சுகாதாரத்துறை பரிந்துரை!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. அங்குக் கடந்த 2 வாரங்களை ஒப்பிடும்போது 15 சதவீதத்துக்கும் அதிகமாகப் பாதிப்பு உயர்ந்து உள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று மத்திய சுகாதாரத்துறை, உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

150 districts with over 15% positivity rate may go under lockdown

அப்போது தொற்று பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கைக் கொண்டு வரலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அதாவது கொரோனா தொற்று 15 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் சில தளர்வுகளை மட்டும் அறிவித்துவிட்டு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த வகையில் கொரோனா தொற்று 15 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசிடம் சுகாதாரத்துறை சிபாரிசு செய்து உள்ளது. மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோடு கலந்து ஆலோசித்து விட்டு முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

150 districts with over 15% positivity rate may go under lockdown

இதுதொடர்பாக பேசிய மத்திய சுகாதாரத்துறையின் உயரதிகாரி ஒருவர், ''தொற்று பரவல் மிக அதிகளவில் உள்ள மாவட்டங்களில் அதன் பரவல் சங்கிலித் தொடரைத் துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. சில வாரங்களுக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே குறிப்பிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக'' கூறியுள்ளார்.

இதற்கிடையே தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்று 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள, சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்