சாக்லெட் வாங்கிக் கொடுத்து.. ‘கொடூரத் திட்டம் போட்ட தந்தை’.. ‘கையும் களவுமாகப் பிடித்த மகள்’.. அடுத்து செய்த துணிச்சல் காரியம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உறவுக்காரக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தையை அவரது மகள் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

சாக்லெட் வாங்கிக் கொடுத்து.. ‘கொடூரத் திட்டம் போட்ட தந்தை’.. ‘கையும் களவுமாகப் பிடித்த மகள்’.. அடுத்து செய்த துணிச்சல் காரியம்..

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அருகே போத்ரா என்ற நபர் 4 வயதான உறவுக்காரக் குழந்தை ஒன்றுக்கு சாக்லெட் வாங்கிக் கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் அந்தக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போத்ராவின் 15 வயது மகள் உடனடியாக அவர் இருந்த அறையைப் பூட்டியுள்ளார். பின்னர் சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை வரவைத்தவர், போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார். உடனே அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் கதவைத் திறந்து குழந்தையை மீட்டுள்ளனர். மேலும் அவர்கள் போத்ராவையும் அடித்து உதைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் போத்ராவைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தையையும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு முன்னரே போத்ரா அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்று அங்குள்ளவர்களால் தாக்கப்பட்டுள்ளது பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

JHARKHAND, FATHER, DAUGHTER, COUSIN, RAPE, POLICE