கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
கேப்டனை மாற்றிய CSK.. அன்றே கணித்த கவாஸ்கர்..ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்து உள்ளது நடராஜர் திருக்கோவில். உலகப் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் 'திருச்சிற்றம்பல மேடை' என அழைக்கப்படும் கனக சபை இருக்கிறது. இதன்மீது ஏறி நின்று சாமி தரிசனம் செய்ய முன்பு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
அனுமதி மறுப்பு
கொரோனா காலத்திற்கு பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக கனக சபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின்னர், விஐபி நபர்களுக்கு மட்டும் கனக சபை மீதேறி நடராஜரை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து பொது மக்களையும் கனக சபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கோரி பலரும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
சட்ட ஒழுங்கு பிரச்சனை
நடராஜர் கோவிலில் அனைத்து மக்களையும் கனக சபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்திய நிலையில், அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள், இதர போராட்டக் குழுவினர் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த தடைவிதித்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கனகசபை மேல் ஏறி தரிசனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவருவதாக கோட்டாட்சியர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
அரசு பரிசீலனை
இந்த விவகாரம் தொடர்பாக, அரசு பரிசீலனை செய்ய இருப்பதால் அரசு சார்பில் இருந்து முடிவு வெளிவரும் வரையில் கடலூர் சிதம்பரம் கோயிலில் இன்று முதல் ஒருமாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் ரவி ஆணை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய திருக்கோவிலான சிதம்பர நடராஜர் கோவிலில் ஏற்பட்டுவந்த பிரச்சனைகளை முன்னிட்டு, கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு விதித்திருப்பது பலராலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
CSK அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தல தோனி.. சின்ன தல ரெய்னா போட்ட ட்வீட்..!
மற்ற செய்திகள்