"என்ன களிமண் மாதிரி இருக்கு".. ஏர்போர்ட் குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பொருள்.. உருக்கி பார்த்தப்போ தான் விஷயமே தெரியவந்திருக்கு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை விமான நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் தங்கம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இதனையடுத்து அதை கடத்திவந்த நபரை பிடிக்க அதிகாரிகள் முயன்று வருகிறார்கள்.
Also Read | அறுவை சிகிச்சையை மறைத்த மணமகன்.. அதிர்ந்துபோன மணப்பெண்.. 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்த திருமணம்..!
கடத்தல்
வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். பணத்திற்காக இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொழில்நுட்ப உதவியோடு அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். இதன்மூலமாக கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டாலும், கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன.
மர்ம பொருள்
அந்தவகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் பயணித்த நபர் ஒருவர் தங்கத்தினை கடத்தி வந்திருக்கிறார். நேற்று காலை 8.30 மணிக்கு இந்த விமானம் மதுரையில் தரையிறங்கியுள்ளது. இதில் 170 பேர் பயணித்திருக்கின்றனர். பயணிகளின் ஆவணங்கள் ஆகியவற்றை பரிசோதித்த பின்னர் அதிகாரிகள் அவர்களை வெளியேற அனுமதித்தனர். அதன்பிறகு, விமானத்தில் இருந்து விமான நிலைய கட்டிடத்திற்குள் வரும் வழியில் இருந்த குப்பைத் தொட்டியில் மர்ம பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
credit: DTNext
தங்கம்
பார்க்க களிமண் போலவே இருந்த அதனை பணியாளர்கள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் கொடுத்திருக்கின்றனர். அதனை உருக்கிய போதுதான் அதில் கலந்திருந்த தங்கம் தனியாக பிரிந்து வந்திருக்கிறது. அதில் 281 கிராம் தங்கம் இருந்ததாகவும் அதன் மதிப்பு 14.3 லட்ச ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அந்த விமானத்தில் பயணித்தவர்கள் குறித்த விபரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் 14 லட்ச ரூபாய் தங்கத்தினை வீசிச்சென்ற நபரை பிடிக்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் மதுரையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்