'சோதனை முடிவு' வருவதற்கு முன்பே '14 பேர் பலி...' 'அதிர்ச்சியை கிளப்பிய 'மாவட்டம்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 14 பேர் சோதனை முடிவு வருவதற்கு முன்பே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'சோதனை முடிவு' வருவதற்கு முன்பே '14 பேர் பலி...' 'அதிர்ச்சியை கிளப்பிய 'மாவட்டம்...'

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவுவதால் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பும் 82,275 ஆக அதிகரித்தது. தொடர்ந்து 3 நாளாக 3,500 பாதிப்பை கடந்து பதிவாகி வருவதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை தலைநகர் சென்னையில் தான் கொரோனா தொற்று அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் இதுவரை குறைவான அளவிலேயே தொற்று இருந்து வந்த நிலையில் தற்போது மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மதுரையில் கொரோனா பரவல் வேகமெடுத்ததன் காரணமாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்படைந்தோர் அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை அரசு கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் நேற்று இரவில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சோதனைக்கு முடிவுகள் வருவதற்கு முன்பாகவே அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்