‘கொரோனா எதிரொலி: கடலூரில் கண்காணிப்பில் 13 பேர்!’.. ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

‘கொரோனா எதிரொலி: கடலூரில் கண்காணிப்பில் 13 பேர்!’.. ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை!

இவர்களுள் கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ளவர்களுள் 17 பேர் இத்தாலியில் இருந்து வந்து வடமாநிலங்களில் தங்கி இருப்பவர்கள் என்றும், இவர்களைத் தவிர மற்றையவர்கள் வட இந்தியர்கள் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தனது அறிக்கையில் உறுதி செய்தார். 

இந்த நிலையில் கொரோனா பற்றிய விழிப்புணர்வுகளை தீவிரப்படுத்தும் பணிகள் பற்றியும் கடலூர் மாவட்ட ஆர்சியரின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் தற்போது சுமார் 50 பேர் பாண்டிச்சேரி, கடலூர் பகுதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருக்கும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளதாகவும், இவர்களுள் 13 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பில்லை என்று ஊர்ஜிதமானதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும் சந்தேகத்தின் அடிப்படையில்தான் இந்த 13 பேரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CORONAVIRUSININDIA, CUDDALORE, CORONAALERT