'போன மாசம்' மட்டும் 122 மில்லியன் 'இந்தியர்களுக்கு' நேர்ந்த 'பரிதாபம்'!.. அடுத்து, '10 கோடி பேருக்கு' நடக்கப் போகும் 'கொடுமை'!.. பகீர் கிளப்பும் ரிப்போர்ட்ஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகம் முழுவதும் 59 லட்சத்துக்கும் நெருக்கமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதேபோல் இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில், கடந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 122 மில்லியன் இந்தியர்கள், அதாவது 12.2 கோடி பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாக பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் தனியார் ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.
இவர்களுள் பெரும்பாலானோர் தினக்கூலிகளாகவும், சிறு தொழில், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானம், கைவண்டி மற்றும் ரிக்ஷா தொழில் புரிபவர்கள் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இவர்களுள் 1.2 கோடி பேர் இந்த ஆண்டு வறுமையின் பிடியில் சிக்கி தவிப்பார்கள் என்றும் உலக அளவில் 4.9 கோடி பேர் கொரோனாவால் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.
தவிர, இந்தியர்களுள் சுமார் 10.5 கோடி பேர் உலக வங்கி நிர்ணயித்திருக்கும் வறுமைக் கோட்டிற்கான தினசரி வருமானமான 243 ரூபாயையும் விடவும் குறைவாக சம்பாதிக்கும் நிலைக்கு சென்றுவிடுவார்கள் என்றும் ஐ.நா பல்கலைக் கழகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்