10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு 'மாணவர்களின்' தேர்ச்சி... 'இதை' வைத்துத்தான் முடிவு செய்யப்படுமாம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரிப்பதால் 10-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், '' 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் வருகை பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் மேல் வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர்,'' என்றார்.
இந்த நிலையில் 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் வருகை பதிவேடு பற்றிய விவரங்களை நாளைக்குள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கும்படி பள்ளி கல்வித்துறை இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதை அடிப்படையாக வைத்து மாணவர்களின் தேர்ச்சி முடிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்