'1,000 சீன வீரர்கள்', '150 இந்திய வீரர்கள்...' 'திடீர்' தாக்குதல் நடத்தினர்... 'நதியில் விழுந்த வீரர்கள்...' 'வீரமரணம்' அடைந்த 'பழனியின்' சகோதரர் 'அதிர்ச்சித் தகவல்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்லடாக் எல்லையில் இரவில் இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்த போது சுமார் 1,000 சீன வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர் என்ற அதிர்ச்சித் தகவலை, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் சகோதரர் இதயக்கனி (ராணுவ வீரர்) தெரிவித்துள்ளார்.
லடாக் கல்வான் எல்லையில், சீன ராணுவத்தின் திடீர் தாக்குதலில், ராமநாதபுரம் மாவட்டம், கடுக்கலுார் ராணுவ வீரர் பழனி, உட்பட, 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில் வீரமரணம் அடைந்த பழனியின் இறுதிச்சடங்கிற்கு அவரது சகோதரர் இதயக்கனி நேற்று வந்திருந்தார். 34 வயதான அவர், ராஜஸ்தான் மாநிலத்தில், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை, 9:00 மணிக்கு அவர் கடுக்கலுார் வந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இதயக்கனி, "நான், 2011ல் வேலைக்கு சேர்ந்தேன். அண்ணனுடன் அடிக்கடி அலைபேசியில் பேசுவேன். ஒரு மாதமாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் மரணம் குறித்து, மற்ற வீரர்களிடம் விசாரித்தேன். அவர்கள், 'ஜூன், 15 இரவு, 9:30 மணிக்கு, 150 இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்தனர். அப்போது, 1,000 சீன வீரர்கள் திடீரென கற்களாலும், கம்பியாலும் தாக்கினர். இந்திய வீரர்களும் திருப்பி தாக்கினர். ஆறு இந்திய வீரர்கள், அருகிலிருந்த நதியில் விழுந்ததால், அவர்களின் நிலைமை தெரியவில்லை' என்றனர்.
வெறும் 150 இந்திய வீரர்கள் மீது, திட்டமிட்டு சுமார் 1000 சீனர்கள் தாக்கியருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்