‘ஒவ்வொரு மேட்ச் முடிஞ்சதும் கிழிஞ்ச ஷூவை பசையால் ஒட்டிதான் விளையாடுறோம்’!.. ரசிகர்களை உருக வைத்த சர்வதேச கிரிக்கெட் வீரரின் பதிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஜிம்பாப்பே கிரிக்கெட் வீரர் ட்விட்டரில் பதிவிட்ட உருக்கமான பதிவுக்கு PUMA நிறுவனம் உதவ முன்வந்துள்ளது.

‘ஒவ்வொரு மேட்ச் முடிஞ்சதும் கிழிஞ்ச ஷூவை பசையால் ஒட்டிதான் விளையாடுறோம்’!.. ரசிகர்களை உருக வைத்த சர்வதேச கிரிக்கெட் வீரரின் பதிவு..!

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 90-களில் சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற அணிகளுக்கு சவால் விடும் வகையில் இருந்தது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு சவால் அளித்து வந்தது. ஆனால் உள்நாட்டு அரசியல் பிரச்சனைகள் காரணமாக, ஜிம்பாப்பே கிரிக்கெட் வாரியம் நலிவுற்று காணப்படுகிறது. இதனால் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் பெரிய அளவில் சம்பளம் கிடையாது.

இந்த நிலையில் ஜிம்பாப்பே அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரையான் பர்ல் (Ryan Burl) தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எங்களுக்கு ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா, அப்படி இருந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்ததும் எங்கள் ஷூக்களை பசையால் ஓட்டி விளையாட வேண்டிய அவசியம் இருக்காது’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Zimbabwe cricketer Ryan Burl posts photo of worn-out shoes

ரையான் பர்லின் இந்த ட்வீட்டை பலரும் ரீ ட்வீட் செய்தும், பல பெரிய நிறுவனங்களுக்கும் டேக் செய்தனர். இதனை அடுத்து காலணிகள் தயாரிப்பு நிறுவனமான PUMA நிறுவனம் ஜிம்பாப்பே கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ளது. அதில், ‘ஷூவை ஒட்டுவதற்கான பசை இனி தேவையில்லை’ என PUMA நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. PUMA நிறுவனத்தின் இந்த செயலை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்