‘விராட் கோலிக்கு வாழ்த்து சொல்லி’.. ‘தன்னைத் தானே கலாய்த்துக் கொண்ட சாஹல்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுட்விட்டரில் விராட் கோலிக்கு வாழ்த்துத் தெரிவித்து யுவேந்திர சாஹல் தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை வழி நடத்தியதன்மூலம் 50 போட்டிகளில் விளையாடிய 2வது இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. மேலும் அவர் 58 சதவிகித வெற்றிகளுடன் இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டனாகவும் உள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் விராட் கோலி தலைமையில் இந்திய அணி 29 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்காக விராட் கோலியை வாழ்த்தி யுவேந்திர சாஹல் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “வாழ்த்துக்கள் பையா. என்னை விட வெறும் 50 போட்டிகள்தான் அதிகம்” எனக் கூறி தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டுள்ளார். இதற்குமுன் இந்தியாவை 50 போட்டிகளுக்கு மேல் வழி நடத்திய ஒரே கேப்டன் தோனியே ஆவார். அவர் 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 60 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
Congrats bhaiya 🤙 only 50 more test matches than me 🤣😂😜 pic.twitter.com/jkmKY7vLxo
— Yuzvendra Chahal (@yuzi_chahal) October 10, 2019