‘2011 உலகக்கோப்பையின் ஹீரோ’.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யுவராஜ் சிங் திடீர் ஓய்வு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த 2000 -ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம் பிடித்தார். தனது அதிரடியான ஆட்டத்தால் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். இந்திய அணி வெற்றி பெற்ற பல போட்டிகளில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்துள்ளது. ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
கடந்த 2011 -ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதனை அடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அதிலிருந்து மீண்டுவர அதிக காலம் ஆனது. உடல்நிலை சரியாகி அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங், தனது அதிரடியான ஆட்டத்தை தொடர் மிகவும் சிரமப்பட்டார். கடந்த 2017 -ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் விளையாடினார். அதன்பின்னர் இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.
இதனை அடுத்து ஐபிஎல் தொடர்களில் கவணம் செலுத்த ஆரம்பித்தார். இந்த வருடம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் சார்பாக யுவராஜ் விளையாடினார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.