விமர்சனத்தை சந்திக்கும் 'கோலி'யின் ஃபார்ம்.. "இத மட்டும் நீங்க திருப்பி பண்ணிட்டீங்க, அப்பறம் பாருங்க.." யுவராஜ் சிங் கொடுத்த செம 'அட்வைஸ்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில், பாதிக்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்பது பற்றி, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் தங்களின் கணிப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும், பிளே ஆப் வாய்ப்பு இருப்பதால், இனி வரும் போட்டிகளில் தோல்வி அடையும் அணிகளுக்கு பிளே ஆப் வாய்ப்பு நெருக்கடிக்குள் ஆகலாம்.
இதனால், வரும் போட்டிகள் அனைத்தும் நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜொலிக்கும் இளம் வீரர்கள்..
அதே போல, இளம் வீரர்கள் அதிக பேர் ஐபிஎல் தொடரில் ஜொலிப்பதை போல, இந்த முறையும் பல இளம் வீரர்கள் தங்களின் வாய்ப்பினை தக்க முறையில் பயன்படுத்தி கிரிக்கெட் பிரபலங்கள் பார்வையை தங்களின் பக்கம் திருப்பி வருகின்றனர். ஆயுஷ் படோனி, திலக் வர்மா, உம்ரான் மாலிக் என பலரது பெயரும், 15 ஆவது ஐபிஎல் தொடரில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
கவலை அளிக்கும் கோலியின் ஃபார்ம்..
இது ஒரு புறம் இருக்க, இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் நடப்பு ஐபிஎல் தொடரில் ரன் அடிக்க கடுமையாக திணறி வருகின்றனர். இதுவரை, 9 போட்டிகள் ஆடியுள்ள கோலி, 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக, கடைசி ஐந்து போட்டிகளில் 22 ரன்கள் மட்டும் சேர்த்துள்ளார்.
இந்தாண்டு டி 20 உலக கோப்பையும் நடைபெற இருப்பதால், விராட் கோலியின் ஃபார்ம் கவலை அளிப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். நிச்சயம் அவர் விரைவில் பழைய ஃபார்முக்கு திரும்புவார் என்றும் ஒரு பக்கம் நம்பிக்கையுடன் உள்ளனர். அதே வேளையில், ரவி சாஸ்திரி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள், சிறிய இடைவெளியை எடுத்துக் கொண்டு பின் கிரிக்கெட் ஆடவும் கோலியை அறிவுறுத்தி வருகின்றனர்.
யுவராஜ் சிங் கொடுத்த செம அட்வைஸ்
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், கோலிக்காக கூறியுள்ள அட்வைஸ் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. "நிச்சயம் கோலியும் தன்னுடைய ஃபார்மின் காரணமாக மகிழ்ச்சியாக இருக்க மாட்டார். மக்களும் மகிழ்ச்சியாக இல்லை. ஏனென்றால், அடுத்தடுத்து சதங்களை அடித்து பல பெஞ்ச் மார்க்குகளை கோலி வைத்துள்ளார். ஆனால், இது போன்ற ஒரு நிலை, சிறந்த வீரர்களுக்கும் வரும்.
முன்பு மிகவும் சுதந்திரமான ஒரு வீரராக ஆடிக் கொண்டிருந்தது போல, மீண்டும் கோலி ஆட வேண்டும். அப்படி அவர் மாறிக் கொண்டால், நிச்சயம் அவருடைய ஆட்டத்தில் அது பிரதிபலிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரராக கோலி உருவெடுத்துள்ளார். அவரை போல ஆட்டத்தில் அதிக அக்கறை எடுத்த ஒரு வீரரை நான் பார்த்ததில்லை.
தனது விளையாட்டில் அதிக கவனம் வைத்திருந்த கோலி, அந்த கவனத்தை மாற்றாமல் நம்பிக்கையுடன் ஆட வேண்டும்" என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்