"சச்சின சப்போர்ட் பண்ண போய் என் கேப்டன் பதவி போச்சு.." தோனி கேப்டன் ஆன கதை.. யுவராஜ் சிங் சொன்ன பரபரப்பு கருத்து..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ். தோனியின் தலைமையில், 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐம்பது ஓவர் உலக கோப்பை என இரண்டையும் இந்திய அணி கைப்பற்றி இருந்தது.

"சச்சின சப்போர்ட் பண்ண போய் என் கேப்டன் பதவி போச்சு.." தோனி கேப்டன் ஆன கதை.. யுவராஜ் சிங் சொன்ன பரபரப்பு கருத்து..

டிராவிட் கேப்டனாக இருந்த போது, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில், அடுத்த சுற்றுக்கு கூட முன்னேறாமல், லீக் சுற்றுடன் வெளியேறி கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தது இந்திய அணி.

அப்போது, டிராவிட் தலைமையிலான அணியில், சச்சின், சேவாக், கங்குலி என தலைசிறந்த வீரர்கள் இருந்த போதும், இந்திய அணியால் வெற்றியை பெற முடியவில்லை.

திடீரென தோனியின் என்ட்ரி..

இதனையடுத்து, இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து டிராவிட் விலகிக் கொள்ள, புதிய கேப்டனாக சேவாக், யுவராஜ் சிங் போன்ற வீரர்களை தான் நியமிப்பார் என்றே அனைவரும் கருதினர். ஆனால், புதிய கேப்டனாக தோனியை இந்திய அணி நியமிக்க, அதே ஆண்டில் டி 20 உலக கோப்பையையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தி இருந்தது.

இந்திய அணியில் அரங்கேறிய சர்ச்சைகள்

இதற்கு முன்பாக, இந்திய அணியின் பயிற்சியாளராக கிரேக் சேப்பல் இருந்த சமயத்தில், அணிக்குள் ஏகப்பட்ட சர்ச்சைகள் அரங்கேறிக் கொண்டிருந்தது. தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வந்தாலும், அணிக்குள் மாறி மாறி பிரச்சனைகள் இருந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தது. டிராவிட் - சேப்பல் ஒரு பக்கம், மற்ற இந்திய வீரர்கள் ஒரு பக்கம் என குழுக்களாக பிரிந்து கிடந்தது.

இதற்கு பின்னர் தான், 50 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி தவற விட்டு, பின்னர் இந்திய அணியின் புதிய கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நான் தான் கேப்டன் ஆகி இருக்கணும்..

"2007 ஆம் ஆண்டில் நான் தான் கேப்டனாகியிருக்க வேண்டும். அந்த சமயத்தில் தான், கிரெக் சேப்பல் சம்பவம் அரங்கேறி இருந்தது. சேப்பலா அல்லது சச்சின் டெண்டுல்கரா என சர்ச்சை முற்றி இருந்தது. அப்போது நான் சச்சினுக்கு ஆதரவாக இருந்தேன். என்னுடைய முடிவு, பிசிசிஐயில் இருந்த சில அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை. என்னை தவிர யாரை வேண்டுமானாலும் கேப்டனாக அறிவிக்கலாம் என பேசப்பட்டதாக நான் அறிந்தேன். ஆனால், அது உண்மையா இல்லையா என்பது எனக்கு தெரியாது.

தொடர்ந்து துணை கேப்டன் பதவியில் இருந்தும் நான் நீக்கப்பட்டேன். அப்போது, சேவாக் அணியில் இல்லை. எனவே, திடீரென தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். துணை கேப்டனாக இருந்ததால், நான் தான் கேப்டனாக அறிவிக்கப்படுவேன் என நினைத்தேன். ஆனால், எனக்கு எதிராக அங்கு முடிவு எடுக்கப்பட்டது. இதனால், எனக்கு வருத்தம் ஒன்றும் கிடையாது. இன்றும் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் கூட, நான் எனது அணி வீரருக்கு தான் ஆதரவாக இருப்பேன்" என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

YUVRAJSINGH, MSDHONI, SACHIN TENDULKAR, யுவராஜ் சிங், தோனி, சச்சின்

மற்ற செய்திகள்