Valimai BNS

"டெல்லியில் இருந்து வந்த சின்னப் பையனுக்கு"..கோலிக்கு யுவராஜ் சிங் எழுதிய உருக்கமான லெட்டர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் வட்டாரத்தில் நல்ல நண்பர்களாக அறியப்படும் யுவராஜ் சிங் விராட் கோலி இணைந்து பல போட்டிகளில் உள்ளனர். களத்திலும் சரி, வெளியேயும் சரி இருவரும் அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது. இந்நிலையில், கோலி அனைத்து விதமான கேப்டன் பொறுப்புகளையும் துறந்திருக்கும் நிலையில், யுவராஜ் சிங் விராட் கோலிக்கு உருக்கமான கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், விராட்கோலியை புகழ்ந்த யுவராஜ் தொடந்து இந்தியாவை பெருமைப்படுத்தும் படி குறிப்பிட்டுள்ளார்.

"டெல்லியில் இருந்து வந்த சின்னப் பையனுக்கு"..கோலிக்கு யுவராஜ் சிங் எழுதிய உருக்கமான லெட்டர்..!

கோல்டன் ஷூ

கோலிக்கு கடிதத்தோடு கோல்டன் ஷூ ஒன்றினையும் யுவராஜ் சிங் பரிசாக அனுப்பி இருக்கிறார். மேலும், அந்தக் கடிதத்தில் பல உருக்கமான நிகழ்வுகளை யுவராஜ் சிங் பகிர்ந்து இருக்கிறார். இந்தக் கடிதத்தை யுவராஜ் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Yuvaraj Singh sends a letter and gift to Virat Kohli

உருக்கமான கடிதம்

யுவராஜ்சிங் எழுதிய கடிதத்தில், "விராட், ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு மனிதராகவும் உன்னுடைய வளர்ச்சியை அருகில் இருந்து நான் பார்த்துள்ளேன். ஒரு இளம் பையனாக வலை பயிற்சியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் தோளோடு தோள் நின்றதில் இருந்து இப்போது ஒரு புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் ஒரு ஜாம்பவானாக உருவெடுத்துள்ளாய். களத்தில் நீ காட்டும் ஒழுக்கமும், ஆர்வமும், விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் கிரிக்கெட் மட்டையை எடுக்க வைத்துள்ளதுடன், அவர்களுக்குள் ஒரு நாள் நீல நிற ஜெர்சியை அணிய வேண்டும் என்ற கனவைத் தூண்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட்டில் உனது தரத்தை உயர்த்தி கொண்டு வரும் நீ, ஏற்கெனவே இதில் நிறைய சாதித்துவிட்டாய். நீ ஒரு லெஜண்ட்ரி கேப்டன் மட்டுமல்ல அற்புதமான தலைவரும்கூட. இப்போது வாழ்க்கையில் நீ புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஏனென்றால், இனி உன்னிடம் இருந்து வழக்கமான ரன் சேஸை எதிர்பார்க்கிறேன். ஒரு சக வீரராகவும், ஒரு நண்பராகவும் உன்னுடன் நிறைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதில் பெருமைப்படுகிறேன்.

Yuvaraj Singh sends a letter and gift to Virat Kohli

பார்ட்னர்ஷிப் போட்டு ரன்கள் சேர்ப்பது, உணவை ஏமாற்றி சாப்பிடுவது, பஞ்சாபி பாடல்களுக்கு இசைத்து நடனமாடுவது மற்றும் கோப்பைகளை வெல்வது என அனைத்தையும் நாம் ஒன்றாகவே செய்துள்ளோம். நீ எனக்கு எப்போதும் Cheeku-வாகவும், உலகிற்கு கிங் கோலியாகவும் இருப்பாய். உன்னுள் இருக்கும் நெருப்பு எப்பொழுதும் எரித்துக்கொண்டே இருக்கட்டும். நீ ஒரு சூப்பர் ஸ்டார். தொடர்ந்து நாட்டை பெருமைப்படுத்து" என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

 Yuvaraj Singh sends a letter and gift to Virat Kohli

யுவராஜ் சிங்கின் இந்த உருக்கமான கடிதத்தை பல்வேறு மக்களும் லைக் செய்தும், ஷேர் செய்தும் வருகின்றனர்.

CRICKET, VIRATKOHLI, CHEEKU, YUVARAJSINGH, யுவராஜ்சிங், விராட்கோலி

மற்ற செய்திகள்