'எல்லாம் தலைக்கு குறிவைக்குறாங்க.. ஆனாலும் நெஞ்சுல அந்த பயம்.. அது இருக்கு!'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இப்போது இளம் வீரர்கள் தன் தலைக்கு குறி வைத்தாலும், இன்னும் தன்னைக் கண்டு பயம் கொள்வதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் குறிப்பிட்டுள்ளார்.

'எல்லாம் தலைக்கு குறிவைக்குறாங்க.. ஆனாலும் நெஞ்சுல அந்த பயம்.. அது இருக்கு!'

39 வயதான கிறிஸ் கெய்ல், 2019-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை விளையாட்டை முன்னிட்டு ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்தான் மேற்கண்ட கலகலப்பான தகவலைக் கூறியூள்ளார். அபாய வீரர் என்று அழைக்கப்படும் அளவுக்கு எதிரணியின் பந்துவீச்சாளரை மிரள வைக்கும் வீரரான கிறிஸ் கெய்ல், அண்மையில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை அலற விட்டு அச்சுறுத்தியதை அடுத்து ‘இவருக்கு இன்னும் வயசாகல’ என்று அனைவரையும் சொல்லவைத்து ஃபுல் ஃபார்மில் இருப்பதை நிரூபித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு கெய்ல் அளித்த பேட்டியில், இளம் வீரர்கள் எல்லாம் தன் தலைக்கு குறி வைப்பதாகவும், ஆகையால் இந்த உலகக் கோப்பை தனக்கு முந்தைய போட்டிகளைப் போல் இருப்பது சிரமம்தான் என்றும், அப்போது ஆடிய ஆட்டத்தில் அனைவரும் மிரண்டார்கள்; ஆனால் இன்றும் அவர்களுக்கு ஓரமாக ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது என்றும் ஆனால் அதை கேமரா முன்னாள் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலு, தனியாக கேட்டால் கெய்ல்.. கெய்ல்தான் என்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அபாயகரமான ஒரு பேட்ஸ்மேனாக தனக்கு வேகப்பந்து வீச்சாளர்களை அலறவிட்டு மைதானத்தை போர்க்களமாக வைத்திருப்பதை , தான் விரும்புவதாகவும், சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தன் மனநிலையை சரியாக வைத்திருக்கும் அவசியத்தை, தான் உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பெரிதாக ஐபிஎல் மேட்ச் கைகொடுக்காத நிலையில், இது தனக்கு சவாலான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.