"என்கிட்ட இந்த 'வேலை'ய வெச்சுக்காதீங்க... வாய்ப்பேயில்ல 'ராஜா'..." கறாராக சொன்ன 'ரஹானே'... 'அதிரடி' கருத்து!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
முன்னதாக, முதல் போட்டியை இங்கிலாந்து அணி முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்து இந்திய அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் கேப்டன்சி மீது கடுமையான விமர்சனம் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது போட்டிக்கு முன்னர் நிருபர்களிடம் பேசிய துணை கேப்டன் ரஹானே, 'இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுகிறோம். ஒரு குழுவாக நாங்கள் எப்படி ஆடுகிறோம் என்பதே முக்கியம். தனிநபர் ஆட்டம் இங்கு முக்கியம் கிடையாது. என்னுடைய கடந்த 10 - 15 போட்டிகளில் நான் எவ்வளவு ரன் எடுத்தேன் என்பது உங்களுக்கே தெரியும்.
அக்சர் படேல் முழு உடற்தகுதியுடன் உள்ளார். அவர் அணிக்கு திரும்புவது சிறப்பாகும். நாளைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என எதிர்பார்க்கிறேன். நாளை களமிறங்கும் அணி குறித்த விவரத்தை நான் கூற விரும்பவில்லை' என்றார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்பியதால், அதன் பிறகு ரஹானே தலைமையில் ஆடிய இந்திய அணி, தொடரை வென்று அசத்தியிருந்தது. ஆனால், இங்கிலாந்து தொடரில் விராட் கோலி மீண்டும் கேப்டன் ஆன நிலையில், இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இதனால், இந்திய டெஸ்ட் அணியில் கோலிக்கு பதிலாக ரஹானேவை நிரந்தர கேப்டனாக்க வேண்டும் என பலர் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ரஹானே, ' கோலி கேப்டனாக ஆனதால் தான் சில வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை என கூறுகிறார்கள். ஆனால், அது கேப்டன் மாறியதால் அல்ல. நீங்கள் எதிர்பார்க்கும் மசாலா என்னிடம் இருந்து கிடைக்காது. கோலி தான் எப்போதும் கேப்டன். இதில் எந்த சர்ச்சையும், வீண் விவாதமும் வேண்டாம்' என ரஹானே அதிரடியாக குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்