'இளம் பெண்ணுடன் டிக்-டாக்'...வம்பில் சிக்கிய பிரபல 'கிரிக்கெட் வீரர்'...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇளம் பெண் ஒருவருடன் டிக்-டாக் செய்த பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடுமையாக எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா .இவர் 35 டெஸ்ட் போட்டிகளில் 67 இன்னிஸ்களில் விளையாடி 203 விக்கெட்களையும்,24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.இதனிடையே சமீபத்தில் துபாய்க்கு சென்றிருந்த யாசிர்,அங்கு இளம் பெண் ஒருவருடன் ஹிந்தி பாடலுக்கு டிக்-டாக் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.மேலும் இதனை கண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்தது.
இதனையடுத்து யாசிர் ஷாவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த கிரிக்கெட் வாரியம்,வீரர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து யாசிர் ஷா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அதில் 'துபாய் சென்றிருந்த போது டிக் டாக் செயலியை சேர்ந்த ஊழியர் ஒருவர்,பாடலுக்கு வாயசைக்கும் படி வற்புறுத்தியதாகவும்,முதலில் மறுத்த அவர் பின்னர் தொடர்ந்து வற்புறுத்தியதால் சம்மதம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Exclusive #YasirShah on #TikTok pic.twitter.com/4RrtQXh0oW
— Farig Tareen Log (@FarigTareenLog) April 1, 2019