‘தார்ப்பாயில் குடிசை’.. ‘பானிப்பூரி வித்ததை கிண்டல் பண்ணாங்க’.. தோனியை கும்பிட்ட இந்த ‘Fanboy’ பின்னணி தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை அணியின் கேப்டன் தோனியை இளம்வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மரியாதையுடன் கையெடுத்து கும்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘தார்ப்பாயில் குடிசை’.. ‘பானிப்பூரி வித்ததை கிண்டல் பண்ணாங்க’.. தோனியை கும்பிட்ட இந்த ‘Fanboy’ பின்னணி தெரியுமா..?

சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று (22.09.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கியுள்ளனர்.

இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் 18 வயதான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், தன்னுடைய 11-வது வயதில் மும்பைக்கு குடியேறினார். அவர் மும்பைக்கு வந்ததன் நோக்கமே கிரிக்கெட் பெரிய வீரராக உருவாக வேண்டும் என்பதுதான். அவருக்கு அந்த வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை.

முஸ்லிம் யுனைடெட் மைதான்ம் அருகே பிளாஸ்டிக் தார்ப்பாயில் ஒரு குடிசை அமைத்து தங்கி வந்த ஜெய்ஸ்வால், அருகில் உள்ள பானிபுரி கடைகளில் வேலை பார்த்து வந்துள்ளார். வேலை முடிந்த மீதமுள்ள நேரங்களில் கடுமையான கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் மும்பை கில்ஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டி, விஜய் ஹசாரே போட்டியில் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்தது.

இதனை அடுத்து ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி ரூ.2.40 கோடி கொடுத்து எடுத்தது. ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து பேசிய ஜெய்ஸ்வால், ‘ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்னைத் தேர்வு செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு இது சிறந்த வாய்ப்பு. என் கிரிக்கெட் வாழ்க்கையைச் சிறப்பாக்க இது எனக்குக் கிடைத்த சிறந்த அடித்தளமாகப் பார்க்கிறேன். நான் சிறுவயதில் பானிபூரி விற்றதைப் பார்த்து பலர் என்னை கிண்டல் செய்வார்கள். ஆனால், அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எப்போது பணம் கிடைக்கிறதோ, நேரம் கிடைக்கிறதோ அப்போது சாப்பிடுவேன். மிகுந்த கஷ்டத்தோடு வாழ்ந்துவந்த எனக்கு ஐபிஎல் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனியை பார்த்து ரசிகராக ஜெய்ஸ்வால் மரியாதையுடன் கையெடுத்து கும்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.Yashasvi Jaiswal respect MS Dhoni video goes viral

மற்ற செய்திகள்